நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மகாராஜா படத்தின் தயாரிப்பாளர் மீண்டும் சேர்ந்து புதிய ஒரு படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஜா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த புதிய படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்கவுள்ளார்.
அதேபோல், நேற்று இன்று நாளை படமும் தமிழில் ஒரு முக்கியமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாக இருந்து வருகிறது. இந்த படம் ரசிகர்களின் மனதில் முத்திரை பதித்ததுடன், சூப்பர் ஹிட் பட்டியலில் இடம்பிடித்தது.சயின்ஸ் பிக்ஷன் கதையாக இருந்தாலும், காமெடியான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்ட இந்த படத்தை இயக்குநர் ஆர். ரவிக்குமார் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார். அதேபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் இவர் இயக்கிய அயலான் திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் இருந்த ஏலியன் கதாபாத்திரம் ரசிகர்களால் மிகுந்த அளவில் ரசிக்கப்பட்டது.
இந்த நிலைமையில், விஜய் சேதுபதி, மகாராஜா தயாரிப்பு நிறுவனம், மற்றும் நேற்று இன்று நாளை பட இயக்குநர் ஆகிய மூவரும் இணையும் இந்த புதிய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.