Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தளபதி 69 படத்தில் இணைந்த அசுரன் பட நடிகர்… ரசிகர்கள் உற்சாகம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள்.

இப்படத்தை எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். படம் அக்டோபர் மாதத்தில் வெளியாவதாக திட்டமிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் நடிகர் டீஜே அருணாசலம் இப்படத்தில் இணைந்திருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். இதை அவர் வெளியிட்ட ஒரு பதிவில், “விஜய் சாருடன் பணியாற்றுவது என் கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது. நான் எப்போதும் பிடித்த தளபதியுடன் ‘தளபதி 69’ படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று தெரிவித்தார். இவர் ‘அசுரன்’ மற்றும் ‘பத்து தல’ ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News