Monday, January 6, 2025

100 கோடி கிளப்பில் இணைந்த கருடன் பட நடிகரின் மார்கோ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹனிப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் நடித்த மலையாள திரைப்படம் ‘மார்க்கோ,’ கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் மிகுந்த வன்முறைக் காட்சிகள் உள்ளதனால், ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. மலையாள திரையுலகில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றும் அதிக வசூலை ஈட்டிய படமாக இது பெருமை பெற்றுள்ளது.

தற்போது, இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வட இந்திய மாநிலங்களிலும் தெலுங்கு மாநிலங்களிலும் வெளியான இப்படம் முக்கியத்துவமான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது.

மலையாளத்தில் 100 கோடியை கடந்த 9வது திரைப்படமாக ‘மார்க்கோ’ சாதனை படைத்துள்ளது. ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ 240 கோடியை அதிகபட்சமாக வசூலித்துள்ளது. இதற்கு முன்னதாக, ‘2018,’ ‘தி கோட் லைப்,’ ‘ஆவேஷம்,’ ‘புலிமுருகன்,’ ‘பிரேமலு,’ ‘லூசிபர்,’ ‘ஏஆர்எம்’ ஆகிய திரைப்படங்கள் 100 கோடியை கடந்திருந்தன.கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மேல் பாய்ஸ்,’ ‘தி கோட் லைப்,’ ‘ஆவேஷம்,’ ‘பிரேமலு,’ ‘ஏஆர்எம்,’ ‘மார்க்கோ’ ஆகிய ஆறு படங்களும் 100 கோடியை கடந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் மற்ற ஆண்டுகளில் இத்தனை படங்கள் ஒரே ஆண்டில் 100 கோடியை கடந்து வசூலித்ததில்லை.

- Advertisement -

Read more

Local News