Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

துருவ நட்சத்திரம், நரகாசூரன் வெளியாகுமா? நீண்டநாள் எதிரப்பார்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் வெளிவராமல் முடங்கிய படங்களை எண்ணினால், அதன் எண்ணிக்கை 500-ஐத் தாண்டும். ஆனால், சில முன்னணி நடிகர்களின் படங்கள் கூட வெளிவராமல் சிக்கலில் முடங்கி இருப்பது உண்மையிலே அதிர்ச்சி அளிக்கிறது.

12 வருட இடைவெளிக்குப் பிறகு வெளியாகவுள்ள ‘மத கஜ ராஜா’ படம் ரசிகர்களை காத்திருக்க வைக்கிறது. இதனைத் தொடர்ந்து, முடங்கிப் போயுள்ள மற்ற சில படங்களுக்கும் விமோசனம் கிடைக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படம் பல ஆண்டுகளாக முடிந்தும் வெளிவராமல் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை வெளிவரவில்லை.

அதேபோல, கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன் மற்றும் பலர் நடித்துள்ள ‘நரகாசூரன்’ படமும் இன்னும் வெளிவரவில்லை. 2020ம் ஆண்டு இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவித்தனர். பின்னர், ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட முயற்சித்தனர், ஆனால் அது கூட வெற்றி பெறவில்லை. இதுபோன்று இன்னும் சில படங்கள் முடிவடைந்தும் வெளிவராமல் உள்ளன. இத்தகைய படங்கள் மூலம் பல கோடிகள் மதிப்புள்ள பணமும் முடங்கிக் கிடக்கிறது.

- Advertisement -

Read more

Local News