தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர், கடைசியாக தேவரா படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இந்த வெற்றிக்குப் பிறகு, ஜூனியர் என்.டி.ஆர் பாலிவுட்டில் வார் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்குப் பிறகு, பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், இந்த புதிய படத்துக்கு கே.ஜி.எப் படத்துக்காக பிரபலமான ரவி பாசுர் இசையமைப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ரவி பாசுர், பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படத்திற்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.