தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருமளவு புகழடைந்தவர். தற்போது, கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி வருவதுடன், மாடலிங்கில் தன்னுடைய திறமையை மேலும் வெளிப்படுத்தி வருகிறார். கூடுதலாக, விதவிதமான போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், சாக்ஷி அகர்வால் சத்தமின்றி தனது திருமணத்தை முடித்துள்ளார். தனது பள்ளிக்கால நண்பரான நவ்னீத் என்பவரை கோவாவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் திருமணம் செய்து கொண்டார். இவ்விழாவில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு, சாக்ஷி சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவர் எழுதிய பதிவில், “இந்த நாள் என் வாழ்க்கையில் ஒரு கனவு போல் உணர்கிறேன். எனது சிறந்த நண்பரும் தோழருமான நவ்னீத்தை திருமணம் செய்து கொள்வது எங்களின் என்றும் தொடரும் கதையின் ஆரம்பம்” என குறிப்பிடுகிறார்.