Monday, December 30, 2024

வணங்கான் பொங்கல் ரிலீஸ்-ஐ உறுதி செய்த படக்குழு… வெளியான அதிகாரபூர்வ போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் வணங்கான் படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஜனவரி 10 ஆக மாற்றியுள்ளனர்.

https://youtu.be/Qh36JHw8auo?si=HY30o2is1H4iyf2q

அஜித் நடித்துள்ள விடாமுயற்சி மற்றும் ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், வணங்கான் படத்திற்கு தேவையான தியேட்டர்கள் கிடைக்காது என கூறப்பட்டது. இதனால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து புதிய தேதியை நிர்ணயித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக வணங்கான் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். விடாமுயற்சி படம் பொங்கலுக்கு சில நாட்கள் முன்பே திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News