Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இயக்குனர் ராம்-ன் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் புது அப்டேட்… என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இயக்குநர் ராம், எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை வென்றவர். அவர் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் இயக்கியுள்ள புதிய படம் “ஏழு கடல் ஏழு மலை”, இதில் நிவின் பாலி, அஞ்சலி, மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்காக ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பணிகள் முடிந்த பின்னர், இது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதன் பிறகு, ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இரு விழாக்களிலும் இப்படம் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து, டிரான்சில்வேனியா திரைப்பட விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்டது. ஜனவரி மாதத்தில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டதும், அது இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. ரசிகர்கள், ராமின் முதல் படமான “கற்றது தமிழ்” பாணியில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு கருத்துகளைப் பகிர்ந்தனர். இந்தப் படத்தின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, “ஏழு கடல் ஏழு மலை” படம் 2025-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News