Thursday, December 19, 2024

தளபதி விஜய்யும் ஷாருக்கானும் இந்த கதாபாத்திரத்துக்கு தயக்கம் காட்டினார்கள்… சுவாரஸ்யமான தகவல் பகிர்ந்த அட்லி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குனராக அறிமுகமான அட்லி, தனது முதல் திரைப்படமான “ராஜா ராணி” மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் விஜய்யை வைத்து மூன்று தொடர்ச்சியான வெற்றி படங்களை இயக்கி, அதன் பின் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை கொண்டு ஆயிரம் கோடி வசூலித்த “ஜவான்” திரைப்படத்தை இயக்கினார். இதன்மூலம் இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குநராக அட்லி மாறியுள்ளார்.

தற்போது, அவர் தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கு கூடுதலாக, தனது சொந்த தயாரிப்பான “பேபி ஜான்” என்ற படத்தையும் தயாரித்துள்ளார். இதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், மற்றும் வாமிகா கபி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். “கீ” திரைப்படத்தை இயக்கிய காலிஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது, மேலும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அட்லி கலந்துகொண்டு பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், “பிகில் படத்தில் விஜய்யிடம் ராயப்பன் கதாபாத்திரம் பற்றி சொன்னபோது, தந்தை கதாபாத்திரத்தை சரியாக செய்ய முடியுமா என அவருக்கு ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. இதை பரிசோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம் என்று அவரை சம்மதிக்க வைத்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட அந்த கதாபாத்திரம் சிறப்பாக வந்தது.

அதேபோல “ஜவான்” படத்தில் ஷாருக்கானிடம் வயதான விக்ரம் ரத்தோட் கதாபாத்திரத்தைச் சொல்லும்போது, ரசிகர்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று அவர் கூறினார். ஆனால், படத்தைப் பார்த்த பிறகு அவரும் அது எதிர்பாராத வெற்றி என்று உணர்ந்தார். இதே போலத்தான் தற்போது “பேபி ஜான்” படத்தில் வருண் தவானை வைத்து ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளேன். இது வெற்றியடையும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News