ஷானில் டியோ இயக்கத்தில், ஆத்வி சேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகி வரும் திரைப்படம் ‘டகோயிட்’. இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டு, ஆரம்ப கட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது.படத்தின் டீஸரும் வெளியாகி வைரலானது எனினும், சில காரணங்களால் ஸ்ருதிஹாசன் இந்த திரைப்படத்திலிருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது மிருணாள் தாக்கூர் இந்த படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளதாக புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மிருணாள் தாக்கூர் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.
ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்த விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம், ஒரே நேரத்தில் ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது.