அறிமுக இயக்குனர் நிதின் வேமுபதி, நாய்களை மையமாகக் கொண்டு புதிய தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். இதற்கு கூரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விலங்குகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல், இந்த படத்தின் கதையும் வித்தியாசமானது. ஒரு நாய் தனது நியாயத்திற்காக நீதிமன்றம் சென்று போராடும் கதையுடன் உருவாகியுள்ளது. இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
சமீபத்தில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூரன் படத்தின் போஸ்டரை வெளியிட்டு, படக்குழுவை பாராட்டியிருந்தார். இதன் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைப்பெற்றது இதில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் , ஷோபா, மற்றும் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் பிரிட்டோ சேவியர் YG மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.