நடிகை மஞ்சு வாரியர், நடிகர் அஜித் குமார் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்தார்.
விடுதலை 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மஞ்சு வாரியர் கூறியதாவது, “அஜித் சார் பேசுவது கேட்டு கொண்டே இருக்கலாம். அவ்வளவு அருமையாக பேசுவார். சிறிய வயதில் இருந்தே பைக் ஓட்ட வேண்டும் என்பது எனக்கு ஆசை. என் பக்கெட் லிஸ்டில்கூட இதைப் பற்றி எழுதிவைத்திருந்தேன். அஜித் சார் பைக்கிற்கு காட்டும் ஆர்வம் என்னையும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தூண்டியது.
அவருக்கு பிடித்ததை செய்ய அவர் நேரம் ஒதுக்கி செய்கிறார். நமக்கு பிடித்ததை செய்ய அவரது முன்னுதாரணம் என்னை ஊக்கமளித்தது. நமக்கு பிடித்ததை செய்வதில் அஜித் சார் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார். அவர் சொன்னது போல நாம் சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையும் சரியாக இருக்கும் என பகிர்ந்துள்ளார்.