Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சீனாவிலும் வெற்றி நடைப்போட்ட மகாராஜா… நித்திலன் சுவாமிநாதனுக்கு தயாரிப்பாளர் கொடுத்த விலையுயர்ந்த பரிசு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் பாராட்டுக்களைப் பெற்று, சில விருதுகளையும் வென்ற குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். சிறிது இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய மகாராஜா திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. பழிவாங்கலின் வித்தியாசமான பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு அனைத்து தரப்பிலும் பெரும் பாராட்டுகள் கிடைத்தன. மேலும், படம் பெரிய அளவில் வசூலித்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்த படம் சமீபத்தில் சீன மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. ஆச்சரியமாக, சீனாவில் இந்த படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து, அங்கும் வெற்றியடைந்தது. அங்கு இதுவரை கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மகாராஜா படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் நித்திலனுக்கு 80 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் பரிசளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News