Wednesday, December 18, 2024

பிளாக் கோட் ஷூட்டில் அசத்தும் அஜித்… விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான ஸ்டைலீஷ் புகைப்படங்கள்! #Vidaamuyarchi

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்திற்கான இசையமைப்பை அனிருத் மேற்கொள்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கதாபாத்திரங்களின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்ட போது, ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், கடந்த மாதம் யாரும் எதிர்பாராத நேரத்தில் படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் வெளியானதும் இணையத்தில் வைரலானது. படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் இன்னும் 7 நாட்களுக்கான வேலை மீதி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, படக்குழு சில புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படங்களில், அஜித் மிக ஸ்டைலிஷாக பிளாக் கோட் சூட்டில் நடந்து வருவது காணப்படுகிறது. மற்றொரு புகைப்படத்தில், இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித், திரிஷா மற்றும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் காணப்படுகின்றனர். மேலும் ஒரு புகைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா கைக்கோர்த்து நடந்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News