தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தற்போது ‘கண்ணப்பா’ என்கிற புராண படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தை நடிகர் மோகன்பாபு தயாரித்து வருகிறார். முகேஷ் குமார் சிங் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை பான் இந்தியா லெவலில் வெளியிடும் விதமாக மலையாளத்திலிருந்து மோகன்லால், ஹிந்தியில் இருந்து அக்ஷய் குமார், தெலுங்கில் இருந்து பிரபாஸ், கன்னடத்தில் இருந்து சிவராஜ் குமார் என அனைத்து மொழி திரையுலக பிரபலங்கள் நடிக்கின்றனர். அந்த வகையில் மோகன்லால் இந்த படத்தில் கிராதா என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படக்குழுவினர் மோகன்லாலின் வித்தியாசமான தோற்றத்துடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more