Tuesday, December 17, 2024

படை தலைவன் படத்தில் கேப்டனின் ஏஐ கதாபாத்திரம் நிச்சயம் உங்களை கவரும் – இயக்குனர் அன்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‛கோட்’ படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறிது நேரம் திரையில் காண்பித்தனர். இதே போல், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன் படத்திலும் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

இதுகுறித்து படை தலைவன் பட இயக்குநர் அன்பு கூறுகையில், இந்த படத்தில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளோம். அவரது கதாபாத்திரம் ரசிகர்களை கண்டிப்பாக ஈர்க்கக்கூடியதாக இருக்கும். மேலும், படை தலைவன் படத்தில் விஜயகாந்த் நடித்த பொன்மனச் செல்வன் படத்தின் ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்’ என்ற பாடலை பயன்படுத்தியுள்ளோம்.

இந்த பாடலை லப்பர் பந்து படத்திலும் பயன்படுத்தினார்கள். ஆனால், அவர்களுக்கு முன்பே நாங்கள் இந்த பாடலை பயன்படுத்த முடிவு செய்திருந்தோம். எங்கள் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், பிறகு வெளிவந்த படத்தில் அந்த பாடல் இடம்பெற்றது. குறிப்பாக விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முக பாண்டியன் இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடலை படத்தில் சேர்த்துள்ளோம்,” என்றார்

- Advertisement -

Read more

Local News