Tuesday, December 17, 2024

கொம்பன் படத்தின் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிக்கிறாரா அருள்நிதி? இதுதான் கதாபாத்திரமாம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அருள்நிதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ‘வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13’ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். சமீபத்தில் வெளியான ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அருள்நிதி தற்போது ‘பம்பர்’ படத்தின் இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதோடு ‘தேன்’ படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகனின் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கிடையில், அவர் மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கொம்பன்’ படத்தின் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அருள்நிதி பாக்ஸராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News