Tuesday, December 17, 2024

பிரபல நிகழ்ச்சியில் எதிர்கொண்ட உருவகேலி விமர்சனம்… சரியான பதிலடி கொடுத்த அட்லி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்து அட்லீ, இந்தி சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்லீ, உருவ கேலி செய்த தொகுப்பாளருக்கு சாணக்கியமான பதிலை அளித்துள்ளார்.

பேபி ஜான் படக்குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தொகுப்பாளர் கபில் சர்மா, அட்லீயிடம் “முதல் முறையாக ஒரு ஸ்டாரை நீங்கள் சந்திக்கும்போது அவர்கள் ‘அட்லீ எங்கே?’ என்று கேட்டிருக்கிறார்களா?” என கேலி செய்யும் வகையில் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி அட்லீக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும், அதற்குத் தனது தனித்துவமான பதிலால் சரியான பதிலடி கொடுத்தார்.

அட்லீ உங்கள் கேள்வியின் நோக்கம் என்னவென்பதை நான் புரிந்துகொள்கிறேன். அந்த உள்நோக்கமான கேள்விக்கு நான் பதிலளிக்க முயற்சிக்கிறேன். இந்த நேரத்தில் நான் ஏ.ஆர். முருகதாஸுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏனெனில் அவர் தான் என்னுடைய முதல் படத்தை தயாரித்தவர். அவர் என்னுடைய கதையை மட்டும் கேட்டார். நான் எப்படி இருக்கிறேன், இதைச் செய்ய முடியும் இல்லையா என்பவற்றைப் பற்றிப் பார்த்ததே இல்லை. அவர் என் மீது நம்பிக்கை வைத்தார். இதுபோலத்தான் நாம் உலகத்தையும் பார்க்க வேண்டும். யாரையும் அவர்களின் வெளித் தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது. அவர்களின் திறமையை வைத்து மதிப்பிட வேண்டும்” என்று கூறினார்.அட்லீயின் இந்த பதில் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அவரது பதிலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News