Tuesday, December 17, 2024

விலங்கு வெப் சீரிஸ் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் நடிகர் சூரி… பூஜையுடன் தொடங்கிய ‘மாமன்’ படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் பெற்ற பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் நடிகர் சூரி. கதையின் நாயகனாக நடித்து வரும் சூரி நடித்துள்ள விடுதலை 2 படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிரசாந்த் பண்டியராஜ் இயக்கும் மாமன் என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் சூரி நாயகனாக நடிக்க நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும், முக்கிய வேடத்தில் நடிகர் ராஜ்கிரணும் நடிக்கின்றனர். இன்று(டிசம்பர் 16) படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள மிகக் கோலகலமாக பூஜையுடன், படப்பிடிப்பு துவங்கியது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், பொழுதுபோக்கு மற்றும் குடும்ப கதைக்களம் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இசையமைக்க, லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே.குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News