நடிகர் சூர்யா நடித்த கடைசியாக வெளிவந்த படம் ‘கங்குவா’ கலவையான விமர்சனங்களையே பெற்றது. சமீபகாலமாக எப்படியாவது ஒரு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துவிட, புதிய இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு சூர்யா முனைந்துள்ளார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்துள்ளார், ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த சூழலில், தனுஷை வைத்து ‘வாத்தி’ மற்றும் துல்கர் சல்மானை வைத்து ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படம் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர் நாக வம்சி, சமீபத்தில் சூர்யாவை சந்தித்து, வெங்கி அட்லூரி இயக்கவுள்ள அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.