Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

உங்கள் குற்றச்சாட்டுகள் என் மீதான அன்பை விட அதிகமாக உள்ளது… தேவி ஸ்ரீ பிரசாத் OPEN TALK! #Pushpa 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள “புஷ்பா 2” திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் சென்னை புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், பின்னணி இசையை அவரால் செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக மற்ற இசையமைப்பாளர்கள் பின்னணி இசையை அமைத்ததாக தகவல்கள் வெளியானாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதற்கிடையில், சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசினார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். அவர் கூறியதாவது: “ரவி சார், நான் சரியான நேரத்தில் பாடல்களை தரவில்லை, பின்னணி இசையை அமைக்கவில்லை என நீங்கள் குற்றம் கூறினீர்கள். ஆனால், நீங்கள் என்னைச் சார்ந்தவர், என்மீது அன்பும் செலுத்துகிறீர்கள். அன்புடன் குற்றச்சாட்டுகள் வந்து சேரும். ஆனால், உங்கள் குற்றச்சாட்டுகள் என் மீதான அன்பை விட அதிகமாக உள்ளது. இப்போது கூட 25 நிமிடங்களுக்கு முன்பு வந்துவிட்டேன். ஆனால், எனது கேமரா என்ட்ரி குறிப்பிட்ட நேரத்தில்தான் அனுமதிக்கப்பட்டது. மேடையில் இவ்வளவையும் பேசுவது தேவையில்லை, ஆனால் நான் வெளிப்படையாக இருக்க விரும்புகிறேன்,” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News