சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவான “கங்குவா” திரைப்படம் கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், இந்தப் படம் எதிர்பார்ப்புக்கு மாறாக கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
இந்த நிலையில், “கங்குவா” படத்தின் மோசமான வசூல் காரணமாக, சூர்யா ஹிந்தியில் நடிக்க இருந்த “கர்ணா” திரைப்படம் ட்ராப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் மகாபாரதத்தில் கர்ணனின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக இருந்தது.
அதோடு, சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான “சர்பிரா” திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சூர்யா, இந்த “கர்ணா” படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார்.இப்படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் திரௌபதியாக கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் “கங்குவா” படத்தின் தோல்வி மற்றும் அதன் வசூல் பாதிப்பை பார்த்து, மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருந்த இந்தப் பாலிவுட் படம் தற்போது கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.