Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு எதிர்மறையான விமர்சனங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் கங்குவா இயக்குனர் சிறுத்தை சிவா இருவரும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்றனர். மலைப்பகுதியில் அமைந்த கோவிலுக்கு ரோப் கார் மூலம் சென்று தரிசனம் செய்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பில் அவர்கள் இருவருக்கும் மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து,கோவிலின் இறைவனை வழிபட்டனர். அவர்களது தரிசனத்திற்குப் பின்னர், கோவில் அர்ச்சகர்கள் அவர்களுக்கு பிரசாதம் வழங்கினர். சுமார் 30 நிமிடங்கள் கோவிலில் இருந்த நடிகர் சூர்யாவும் இயக்குனர் சிறுத்தை சிவாவும் பக்தியுடன் வழிபாடு செய்தனர். தரிசனம் முடிந்ததும் அங்கு வந்த ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

- Advertisement -

Read more

Local News