‘ஆக்ஷன்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா லக்ஷ்மி, தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ படத்தில் இலங்கை தமிழச்சியாக நடித்தார். மேலும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலியாகவும், ‘கட்டா குஸ்தி’ படத்தில் நாயகியாகவும் நடித்தார்.
சமீபத்தில், திருமணத்திற்கு வரன் தேடிய அனுபவம் குறித்து அவர் மனம் திறந்து பேசினார்: “திருமணம் செய்யலாம் என்ற எண்ணத்தில், மேட்ரிமோனி இணையதளத்தில் என் தாயாரிடம் பதிவு செய்யுமாறு கேட்டேன். எனது படத்துடன் மணப்பெண் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், அதை பார்த்தவர்கள் அனைத்தையும் போலி என நினைத்துவிட்டனர்.
நான் சிறுவயதிலிருந்து திருமணத்தை ஒரு கனவாகவே கொண்டிருந்தேன். குருவாயூரில் திருமணம் செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆனால், வயதாக வளர, திருமண வாழ்க்கை பற்றிய கருத்து மாறியது. திருமணமானவர்களை பார்த்தபோது, அவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பதைக் காணவில்லை. கடந்த ஆண்டு மட்டுமே ஒரு குடும்பம் முழு மகிழ்ச்சியுடன் வாழ்வதைக் கண்டேன். இப்போது எனக்கு 34 வயதாகிறது. இதனால் தான், திருமண வாழ்க்கை குறித்து மெய்யான உணர்வு வந்தது என்றுள்ளார்.