கடந்த ஆண்டில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமானார். அவர் ஒரு சாதாரண பார்க்கிங் பிரச்னையை சுவாரஸ்யமான கதையாக மாற்றி வழங்கியிருந்தார்.
இந்த படத்தின் வரவேற்பு மற்றும் வசூல் வெற்றியை தொடர்ந்து, அவர் மீண்டும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் புதிய படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயனுடன் அவர் புதிய படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியானது. சமீபத்தில் ராம்குமார் பாலகிருஷ்ணன், நடிகர் விக்ரமிடம் புதிய கதையை முன்மொழிந்ததாகவும் சினிமா வட்டாரங்களில் செய்திகள் பரவியுள்ளன.