Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

16 மொழிகளில் வெளியாகும் விமலின் பெல்லடோனா திரைப்படம்… புதுமையான கதைக்களத்தில் முதல் முறையாக தடம் பதிக்கும் விமல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யூபோரியா பிலிக்ஸ் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் உருவாகும் விமலின் 35வது திரைப்படம் ‘பெல்லடோனா’ ஆகும். இது சூப்பர் நேச்சர் ஹாரர் வகை படமாக உருவாக்கப்படுகிறது. இதில் தேஜஸ்வினி ஷர்மா நாயகியாக நடிக்க, மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னம் இன்னொரு முக்கிய கதாநாயகியாக நடித்துள்ளார். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்கிறார், அதேசமயம் ஏசி ஜான் பீட்டர் இசையமைக்கிறார்.

படத்தை பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்த இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி, இந்த படம் விமலுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும் என கூறியுள்ளார். படத்தை பிரமாண்டமாக உருவாக்கி சிறப்பாக நிறைவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த கதைக்கு ஏற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைத் தேர்வு செய்துள்ளோம் என்றும் கூறினார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மணிப்புரி உள்ளிட்ட 16 மொழிகளில் வெளியாக உள்ளது என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News