Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாரான தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு… படப்பிடிப்புக்காக எங்கு செல்கிறார்கள் தெரியுமா? #IdlyKadai

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எனும் படத்தை இயக்கி முடித்துவிட்டு, கையோடு ‘இட்லி கடை’ எனும் புதிய படத்தை இயக்கி, அதில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை ‘டாவுன் பிக்சர்ஸ்,’ ‘வுண்டர்பார் பிலிம்ஸ்,’ ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் மேற்கொள்கிறார்.

இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.

படத்தின் படப்பிடிப்பு தேனி, பொள்ளாச்சி, மதுரை போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, ‘இட்லி கடை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தனுஷ் மற்றும் படக்குழு பாங்காக் செல்ல உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அங்கு படத்தின் சில முக்கிய காட்சிகளை படமாக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News