Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கூலி படப்பிடிப்பில் ஒரே பிஸி… அடிக்கடி செல்ஃபி எடுத்து வெளியிடும் நடிகை ஸ்ருதிஹாசன்! #COOLIE

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அந்த வரிசையில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அதன் பிறகு, தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில், நடிகை சுருதிஹாசன் தற்போது சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகின்றார். இதன் ஒரு பகுதியாக சுருதிஹாசன் மேக்கப் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இப்படத்தில் அவர் ‘பிரீத்தி’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News