நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/11/1000111001.jpg)
மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவுடன், பல படங்களை கைவசம் வைத்திருக்கும் வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் பிப்ரவரி மாதத்தில் மும்பையில் நடைபெற்றது. அதன் பிறகு, தாய்லாந்தில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். மேலும், சென்னையில் நடைபெறும் வரவேற்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன், பிரபு, அர்ஜூன், சமந்தா உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
வீடியோ லிங்க் : https://www.instagram.com/reel/DCf3Fwxi7D8/?igsh=cng5bGtpbmF5b3hk
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/11/1000111014-714x1024.png)
14 ஆண்டுகளாக காதல் பழகி, தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது தனது உடற்பயிற்சி நடவடிக்கைகளில் ஆர்வமாக உள்ளார். இதைத் தொடர்ந்து, கடுமையான உடற்பயிற்சி செய்ததால் கால்வலியால் அவதிப்பட்டு, உக்காரவும் முடியாமல் போன தருணங்களை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.