Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

சுயசரிதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாரா ரஜினிகாந்த்? உலாவும் புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1975 ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த், இப்போது தனது 50வது ஆண்டை நெருங்கியுள்ளார். தற்போது அவர் ‘கூலி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து, ‘ஜெயிலர் 2’ படத்திலும் அவர் நடிக்க உள்ளார். அதற்குப் பிறகு, ரஜினிகாந்த் தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை புத்தகமாக எழுதும் திட்டத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்த் சுயசரிதை எழுத முயற்சி செய்தார். ஆனால் சில காரணங்களால் அந்த முயற்சியை கைவிட்டார். தற்போது மீண்டும் அதே முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை.

- Advertisement -

Read more

Local News