Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

கவனம் ஈர்த்த குபேரா க்ளிம்ப்ஸ் வீடியோ… எத்தனை மொழிகளில் வெளியாகிறது தெரியுமா? #Kubera

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குபேரா’. இந்த படத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஹாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இசையமைப்பை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளதுடன், நிகேத் பொம்மி ஒளிப்பதிவை கவனித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட ‘குபேரா’ திரைப்படம், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தரப்பட்ட பார்வையாளர்களை சென்றடைவதற்காக மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது. தற்போது, இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

Read more

Local News