Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இன்று மாலை வெளியாகிறது கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட டீஸர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! #Vaa Vaathiyaar

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் இயக்குனர் பிரேம் குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ படத்தில் நடித்தார். தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சர்தார் 2’ படத்திலும் நடிக்கிறார். அடுத்ததாக ‘சூது கவ்வும்’ மற்றும் ‘காதலும் கடந்து போகும்’ படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கிய ‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

இந்த படம் கார்த்தியின் 26வது திரைப்படமாகும். இதில் அவர் எம்.ஜி.ஆர் ரசிகராக நடித்துள்ளார். படத்தை ஸ்டூடியோ கிரேட் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பை சந்தோஷ் நாராயணன் செய்துள்ளார். சத்யராஜ் வில்லனாகவும், ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் 2025 பொங்கலுக்கு வெளியிடப்படும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்துள்ளார். ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் நவம்பர் 14-ம் தேதி கங்குவா திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News