மலையாளத் திரையுலகில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக மகத்தான வெற்றி பெற்று வருபவர் மோகன்லால். இவர் மறைந்த பிரபல நடிகர் பாலாஜியின் மகள் சுசித்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஸ்மயா என்ற மகளும் பிரணவ் என்ற மகனும் உள்ளனர். பிரணவ் கடந்த சில ஆண்டுகளாக நடிகராக தன்னை அறிமுகப்படுத்தி படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் மோகன்லாலை பற்றிய சில புதிய தகவல்களை அவரது மனைவி சுசித்ரா பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “மோகன்லால் நடித்த முதல் படம் ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படத்தில் இருந்து அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. பல வருடங்கள் கழித்து, ஒரு குடும்ப திருமண நிகழ்வில் அவரை முதன் முதலில் நேரில் சந்தித்தேன். அதற்கு முன்னர் அவருக்கு தெரியாமல் தினசரி ஐந்து போஸ்ட் கார்டுகளை என் பெயரை குறிப்பிடாமல் அனுப்பி வந்தேன். பின்னர் அவர் அதை நான் அனுப்பியதாக கண்டுபிடித்தார்.
எனக்கு திருமணம் பற்றிய பேச்சு வந்தபோது, மோகன்லாலை நான் விரும்புவதாக என் குடும்பத்தினரிடம் கூறினேன். என் தந்தை தனது நெருங்கிய நண்பரான நடிகை சுகுமாரி மூலம் இந்த தகவலை மோகன்லாலிடம் தெரிவித்து, எங்கள் திருமணம் வெற்றிகரமாக முடிந்தது. வீட்டில் அவரை செல்லமாக ‘சுந்தர குட்டப்பன்’ என்று அழைப்பார்கள். ஆனால் அது அவருக்கே தெரிந்ததா என எனக்கு தெரியாது,” என்று சுசித்ரா பகிர்ந்துள்ளார்