தென்னிந்தியாவில் இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. வருடத்திற்கு இரண்டு படங்களாவது தெலுங்கில் நடிக்கும் அவர், தற்போது தனது 12வது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இடையில், ஷாஹிபா என்ற வீடியோ ஆல்பத்தில் நடித்த அவர், அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்தபோது, அங்குள்ள அரங்கின் படிக்கட்டில் கால் தவறி விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கவனம் பெற்றது.
இந்த நிகழ்வை விஜய் தேவரகொண்டா தனது விளம்பரமாக மாற்றிக் கொண்டார். விழுவதற்குப் பிறகு ஒரு படுக்கையில் லாலிபாப் சாப்பிடுவது போல வித்தியாசமான வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டார்.
மேலும், ரசிகர்கள் அவரை செல்லமாக ‘ரவுடி’ என்று அழைப்பதும் வழக்கம். அந்த வீடியோவுக்கு, “நான் கீழே விழுந்தது காமெடியாக போய்விட்டது. ஆனால் ரவுடிகளின் வாழ்க்கை என்றாலே இதெல்லாம் சகஜம் தான். ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பது ரவுடி வாழ்க்கையின் இயல்பான பகுதியாகும்” என்று கூறி சமாளித்தார்.