Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

வெளியேறிய சுனிதா..‌. ஆண்கள் வீட்டிற்குள் செல்வது யார்? பெண்கள் அணியில் பற்றிய நெருப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியில் பல்வேறு ரசிகர்களின் மனதை கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒவ்வொரு வருடமும் 100 நாட்களை மையமாக வைத்து நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி வரவேற்பு உள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி துவங்கிய நிலையில், நிகழ்ச்சி 35 நாட்களை கடந்து விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.

சமீபத்தில் 6 புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். பழைய போட்டியாளர்கள் புதிய போட்டியார்களை தொடர்ந்து டார்கெட் செய்யும் நிலையில், இந்த வார எலிமினேஷனில் யாரும் எதிர்பாராத போட்டியாளரான சுனிதா வெளியேறியுள்ளார். பிக்பாஸ் ரசிகர்கள் இந்த வாரம் பவித்ரா அல்லது சாச்சனா வெளியேற்றப்படலாம் என்று கருதினார்கள். ஆனால் சுனிதா நல்ல உள்ளடக்கம் கொடுத்து விளையாடியிருந்த போதிலும், ஓட்டுகள் குறைவாக பெற்று அதிரடியாக வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், இன்றைய ப்ரோமோக்களைப் பார்த்தபோது, இந்த வாரம் ஆண்கள் அணிக்குச் செல்லப்போகும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பெண்கள் அணியில் மோதல் ஏற்படுவதைக் காட்டுகிறது. அடுத்தடுத்த சம்பவங்கள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன், இன்றைய ப்ரோமோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

- Advertisement -

Read more

Local News