‘கேஜிஎப்’ படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு சிறிய இடைவெளி எடுத்த நடிகர் யஷ், தற்போது ‛டாக்ஸிக்’ என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனரும் நடிகையுமான கீத்து மோகன் தாஸ் இயக்குகிறார்.
அவரிடம் கலைப்படமோ அல்லது விருதுப் படமோ உருவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இந்த முறை அவர் முற்றிலும் மாறாக முழுநீள ஆக்சன் படமாக இதை உருவாக்க உள்ளார்.
அதற்கேற்றவாறு, யஷ் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அதிக அளவிலான சண்டைக் காட்சிகள் படத்தில் இடம்பெறுகின்றன. தற்போது இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஹாலிவுட்டில் புகழ் பெற்ற ஆக்சன் டைரக்டரான ஜேஜே பெரி மும்பை வந்துள்ளார். இவர் ‘எக்ஸ்பென்டபிள்ஸ் 3’, ‘ஸ்பை’, ‘ஸ்கை கிராப்பர்’ போன்ற படங்களில் அற்புதமான சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.