Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

புஷ்பா 2ல் ஸ்ரீலிலா நடனமாடுவது உறுதி… வெளியான தகவலால் ரசிகர்கள் ஒரே குஷி! #PUSHPA 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘புஷ்பா 2: தி ரூல்’ உருவாகி வருகிறது. ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து வெளியான பாடல்களின் லிரிக் வீடியோக்களும் வைரலானது. இப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்தார், அந்தப் பாடல் இந்தியா முழுவதும் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து ‘புஷ்பா 2’ படத்தில் யார் அப்படி நடனமாடுவர் என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதற்காக இந்தி நடிகைகள் தேர்வு செய்யப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஆரம்பத்தில் ஷ்ரத்தா கபூர் தேர்வு செய்யப்படுவார் என்ற வதந்திகளும் பரவின.

இந்நிலையில், ‘குறிச்சின்னி மடத்தோப்பேட்டி’ பாடலின் மூலம் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீலீலா, ‘புஷ்பா 2’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இது ஸ்ரீலீலா, ‘புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு குத்து பாடலில் நடனம் ஆடியுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News