Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

டிராகன் படத்தில் இணைந்த பிரபல யூட்யூபரகள் ! அப்போ வேற மாதிரி இருக்குமே!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘டிராகன்’ படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இந்த’டிராகன்’ படத்தில் வி.ஜே. சித்து அன்பு என்ற கதாபாத்திரத்திலும், ஹர்ஷத் கான் வெற்றி என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு எக்ஸ் தளத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் கயடு லோஹர் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News