Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

அமீர்கான் உடன் இணைகிறாரா சாய் பல்லவி… அட வித்தியாசமான காம்போவா இருக்கே!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சாய் பல்லவி, தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் ‘அமரன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது, மேலும் இதுவரை ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தா எனும் கதாபாத்திரமாகவும், அவரது மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

இந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் பல்லவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ‘அமரன்’ படத்தின் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி அடுத்ததாக அமீர்கானுடன் இணைந்துள்ளதாக குறிப்பிட்டார். அதன்படி, அமீர்கான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் ஒரு இந்தி படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார், மேலும் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்று கூறியுள்ளார்.

சாய் பல்லவி இதற்கு முன், நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ‘ராமாயணம்’ படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026ஆம் ஆண்டு தீபாவளி விடுமுறையில், இரண்டாவது பாகம் 2027ஆம் ஆண்டு தீபாவளி விடுமுறையில் வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News