Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நான் கடந்த காலத்தில் சில தவறுகளை செய்துள்ளேன், அது உண்மைதான்… நடிகர் சமந்தா டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுடன் காதலித்து, திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சில ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த பின்னர், அவர்கள் விவாகரத்து செய்தனர். தற்போது நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணத்தை நடத்துவதற்கு தயாராக இருக்கிறார். மறுபுறம், சமந்தா மிகச் சீக்கிரமாக திரைப்படங்களில் நடிப்பதைத் தொடங்கியுள்ளார். அவரால் கமிட் செய்யப்பட்டுள்ள படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஒன்றின் பின்பு ஒன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த சூழலில் சமந்தாவின் ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

இந்த நேரத்தில் சமந்தா மீண்டும் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில், ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள சிட்டாடல் ஹனி பன்னி என்ற வெப் சீரிஸில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரிஸ், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. இந்த வெப் சீரிஸில் சமந்தா ஆக்‌ஷன் காட்சிகளில் தீயாய் அடித்து தாக்கி நடித்துள்ளார். இதே நேரத்தில், சீரிஸ் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட சமந்தா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவரது பேச்சில், “நான் கடந்த காலத்தில் சில தவறுகளை செய்துள்ளேன், அது உண்மைதான். மேலும் சொல்லப் போனால், சில விஷயங்கள் எனக்குச் சரியாக அமையவில்லை. அந்த தோல்வியை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார். சமந்தாவின் இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள், அவருடைய கடந்த கால தவறு திருமணத்தை பற்றி சொல்கிறாரா அல்லது அவர் தேர்ந்தெடுத்த கதைகளைப் பற்றியதா என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News