Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

காவல்துறை அதிகாரியாக களமிறங்கிய நகுல்… வெளியான தி டார்க் ஹெவன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகுல் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படமான ‘வாஸ்கோடகாமா’ மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படம் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இதன் பிறகு நகுல் நடிக்கும் அடுத்த படமான ‘தி டார்க் ஹெவன்’ வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்கியவர் பாலாஜி, மேலும் படத்தை பி ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நகுல் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஒவ்வொரு 25 வருடத்திற்கும் ஒருமுறை நிகழும் மர்ம கொலை சம்பவத்தை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. நகுல் காவல் அதிகாரியாக நடிப்பது இதுவே முதல்முறை. இதில் ரேனு சவுந்தர் நாயகியாக நடித்துள்ளார். அவர்களுடன் சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், தோனி தயால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News