Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

பாலிவுட்டில் தென்னிந்திய கலைஞர்களுக்கு சிக்கல் நீடிக்கிறது… நடிகை ரெஜினா OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜ தந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ரா தெலுங்கு திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் இரண்டு இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தென்னிந்திய நடிகைகள் இந்தி திரைத்துறையில் நடிக்க சென்றபோது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாக ரெஜினா கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், “தென்னிந்திய திரையுலகிலிருந்து இந்தி சினிமா துறைக்கு செல்லும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பல சவால்களை சந்திக்கிறார்கள்.

இந்தி தெரியாத தென்னிந்திய கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதில் இந்தி திரைத்துறையினர் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஒருவேளை இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என முடிவு செய்தால், மும்பையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் வேண்டும். இது பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவசியம் கடைபிடிக்க வேண்டும். ஆனால் தென்னிந்திய திரைத்துறையில் இப்படி இல்லை. மற்ற மொழி திரையுலகுகளை ஒப்பிடும்போது இந்தி சினிமாவில் போட்டிகள் அதிகம்,” என்று அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News