Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

அதிரடியாக நுழைந்த 6 போட்டியாளர்கள்… அதிர்ந்த பிக்பாஸ் வீடு! #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8, முந்தைய சீசன்களுடன் ஒப்பிடுகையில், புதுமையான விதிமுறைகளும் கேம்களும் இணைந்த விதத்தில் பரபரப்பாக இருக்கிறது. 28 நாட்களை நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில், இந்த வார எவிக்சனில் அன்ஷிதா வெளியேறுவார் என பலரும் எதிர்பார்த்தனர். எனினும், விஜய் சேதுபதி, இந்த வாரத்தில் எவிக்சனே இல்லை என்று அதிரடியாக அறிவித்தார்.

இதில் மேலும் ஆறு புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர். முன்னாள் போட்டியாளரான சுஜா வருணேவின் கணவர் சிவாஜி தேவ் என்ற சிவக்குமார், மாடல் ரியா தியாகராஜன், நடிகர் ராணவ், வீஜே வர்ஷினி வெங்கட், பேச்சாளர் மஞ்சரி மற்றும் தமிழும் சரஸ்வதி சீரியலின் வில்லன் நடிகர் ராயன் ஆகியோர் 28ம் நாளில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். ஏற்கனவே சூடுபிடித்திருக்கும் பிக்பாஸ் வீட்டில் புதிய போட்டியாளர்கள் வந்ததால் நிகழ்ச்சியில் அதிக ரணகளம் ஏற்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News