குட்டிப் புலி, கொம்பன், மருது, விருமன் போன்ற கிராமத்து கதைகளை மையமாகக் கொண்டு வெற்றி படங்களை அளித்தவர் இயக்குனர் முத்தையா. எனினும், அவர் இயக்கிய “காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்” திரைப்படம் சறுக்கியது. இதன் காரணமாக, அதற்குப் பிறகு எந்த முன்னணி நடிகராலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
சமீபத்தில் நடிகர் விஷால் -ஐ வைத்து கிராமத்து கதைக்களத்தில் ஒரு புதிய படத்தை இயக்குவுள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
தற்போது முத்தையா தனது மகனை வைத்து “சுள்ளான் சேது” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் புதிய ஒரு படத்தை தயாரிக்க உள்ளார், அதில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், இப்படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.