Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

அடுத்தடுத்தென அசர வைக்கும் தனுஷ்… அடுத்த லைன்-அப் இதுதானா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராயன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு, தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற புதிய படத்தை இயக்கி அதில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கியுள்ள “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.

இந்த சூழலில், தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் “குபேரா” என்ற படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இதன் பிறகு, இசைப்புயல் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். மேலும், “போர்தொழில்” படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா மற்றும் “லப்பர் பந்து” படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் இயக்கும் படங்களில் தனுஷ் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதில், தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ள படத்தை, தனுஷ் இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படத்தை தயாரித்து வரும் அதே நிறுவனம் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News