Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இந்த வாரம் வெளியேறியது இவர்தானா… கசிந்த தகவல்… #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் தீபாவளிப் பண்டிகை வந்ததால், எவிக்‌ஷன் இருக்குமா இல்லையா என பிக்பாஸ் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எந்தவிதச் சலுகையும் அளிக்கவில்லை என்று தெரிகிறது.(இன்று வெளியான புரோமோக்களை இந்த செய்திக்கு இடையில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்)

இதைப்போல நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து ஒரு மாதம் ஆகிய நிலையில், இதுவரை வைல்டு கார்டு என்ட்ரி நடத்தப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டிக்கு எந்த நேரத்திலும் செல்ல தயாராக உள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி கலந்து கொள்ளும் வார இறுதி எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் வழக்கம் போல் இன்று காலை பிக் பாஸ் செட்டில் தொடங்கியது.

இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில், அருண், ரஞ்சித், ஜெஃப்ரி, ஜாக்குலின், பவித்ரா, மற்றும் அன்ஷிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இன்றைய பிற்பகல் நிலவரப்படி, குறைவான ஓட்டுகள் பெற்று நடிகை அன்ஷிதா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News