இயக்குநர் சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இரண்டு படங்களும் வெற்றியடைந்ததைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தீபாவளி காலத்தில் தமிழில் ‘அமரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ உள்ளிட்ட படங்கள் வெளிவந்தன. தெலுங்கில் ‘லக்கி பாஸ்கர்’, கன்னடத்தில் ‘பஹீரா’ ஆகிய படங்களும் வெளியானது. இதில் ஜி.வி.பிரகாஷ் ‘அமரன்’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ படங்களுக்கு இசையமைப்பாளர் ஆனார். இரண்டு படங்களும் பெரிய வரவேற்பைப் பெற்றதால், ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
சுதா கொங்கரா இதை அவருடைய எக்ஸ் தளத்தில் “என் அபிமான இசையமைப்பாளர் மற்றும் தம்பி தீபாவளிக்கு இரண்டு அற்புதமான ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கியுள்ளார். ‘அமரன்’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’. அவரது பின்னணி இசை மற்றும் பாடல்கள் அற்புதமாக இருந்தன. உங்கள் 100-வது படத்தில் உங்களுடன் பணிபுரிய ஆவலாக இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், “நன்றி. GV100 சிறப்பானதாக இருக்கும்.
எனது முதல் தேசிய விருது உங்களுடைய படத்தில் கிடைத்தது. அதற்காக என் நன்றியை 100-வது படத்தில் திருப்பித் தருவேன்” எனக் கூறினார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்திற்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இதை இருவரும் தங்களுடைய பதிவில் தெரிவித்துள்ளனர். சுதா கொங்கரா மற்றும் ஜி.வி.பிரகாஷ் நெருங்கிய நண்பர்கள் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.