Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

மார்டன் புடவையில் மத்தாப்பு உடன் தீபாவளி கொண்டாடிய நடிகை நிவேதா பெத்து ராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரையுலக பிரபலங்கள் தீபாவளி பண்டிகையை வெகுவாக கொண்டாடியுள்ளனர். நடிகர், நடிகைகள் தங்களுடைய தீபாவளி கொண்டாட்டங்களை புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மதுரை பூர்வீகத்தை கொண்ட நிவேதா பெத்துராஜ், தற்போது துபாயில் வீடு வாங்கி செட்டிலாகியுள்ளார். மாடலிங் மற்றும் கார் ரேசிங் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட இவர், 2016 ஆம் ஆண்டு “ஒரு நாள் கூத்து” திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற “அடியே அழகே…” பாடல் அவரை பிரபலமாக்கியது. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து “எம்மனசு தங்கம்,” “திமிரு புடிச்சவன்,” “டிக் டிக்” உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார்.

தற்போது, நடிகை நிவேதா பெத்துராஜ் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நீல நிற புடவை அணிந்து, தலைப்பகுதியில் மல்லிப்பூ அணிந்து, கையில் மத்தாப்பூவுடன் ரசிகர்களுக்கு வாழ்த்து கூறும் காட்சிகள் உள்ளன. அந்த வீடியோ பல லைக்குகளைப் பெற்று ட்ரெண்டாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News