Thursday, October 31, 2024

40 ஜோடிகளுக்கு மட்மூட்டி தலைமையில் சிறப்பாக நடந்த திருமணம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரையுலகில் இன்றும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் மம்முட்டி. இதற்கு மேலும், தனது அறக்கட்டளை மற்றும் சொந்த மருத்துவமனையின் மூலம், வசதி இல்லாதவர்களுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் தனது நண்பர் சமது ஏற்பாடு செய்திருந்த ‘ட்ரூத் மாங்கல்யம்’ என்ற மிகப்பெரிய திருமண நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மம்முட்டி. இந்த நிகழ்வில், அனைத்து மதத்தவர்களையும் சேர்ந்த 40 ஜோடிகளின் திருமணம் மம்முட்டியின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது.

சில மாதங்களுக்கு முன், கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்தனர். பலரும் தங்கள் வீடுகளை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர். அந்த சம்பவத்தில் சுருதி என்ற பெண் தனது முழு குடும்பத்தையும் நிலச்சரிவில் இழந்துவிட்டார். அப்போது அவரின் நண்பரான ஜென்சன் சுருதிக்கு ஆதரவாக இருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் சில நாட்களிலேயே, ஜென்சன் ஒரு விபத்தில் உயிரிழந்தது சுருதிக்கு மிகுந்த வேதனையாக அமைந்தது.

வீடியோ லிங்க்: https://www.facebook.com/share/v/19QuPkWFdL/?mibextid=jmPrMh

அந்த சமயத்தில், நடிகர் மம்முட்டி சுருதியை ஆறுதல் கூறி, “நான் எப்போதும் உனக்கு துணை நிற்பேன்” என்று உறுதியளித்தார். மேலும், இந்த மெகா திருமண நிகழ்வில் 40 ஜோடிகளில் ஒன்றாக சுருதி-ஜென்சனின் திருமணத்தையும் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் விதியின் விளையாட்டு வேறு விதமாகிவிட்டது. இருப்பினும், சுருதியை இந்த நிகழ்விற்கு அழைத்திருந்த மம்முட்டி, அவரை தன் பக்கத்தில் அமர வைத்து, அவரது ஆறுதலுக்காக தனது அறக்கட்டளை மூலம் பெரிய தொகையையும் வழங்கினார். “இது வெறும் காகிதம் தான்… ஆனால் இது அன்பின் அடையாளம்” என்று கூறிய மம்முட்டி, சுருதிக்கு மன நிம்மதியையும் உற்சாகத்தையும் அளித்தார்.

- Advertisement -

Read more

Local News