Thursday, October 31, 2024

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களோடு விஜய்யின் த.வெ.க மாநாடு வெற்றிகரமாக நடந்ததற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒவ்வொரு தீபாவளிப் பண்டிகைக்கும் சென்னையில் இருந்தால், தனது போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன் வந்து ரசிகர்களை சந்திப்பதை ரஜினிகாந்த் வழக்கமாகக் கடைப்பிடித்து வருகிறார். இந்த தீபாவளியிலும் அவரது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து, அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர், நிருபர்களிடம் பேசியபோது, “எல்லோருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்,” என்றார் ரஜினிகாந்த்.

அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் கட்சியின் மாநாடு குறித்து நிருபர்கள் கேட்டபோது, விஜய் வெற்றிகரமாக இந்த மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். அவருக்கு எனது நல்வாழ்த்துகள் என தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News